பாடத்திட்டம்
வாரம் 1
வகுப்புப்பாடம்
ஆசிரியர், மாணவர், பள்ளி பற்றிய அறிமுகம், கலந்துரையாடல்
வகுப்பு விதிமுறைகள் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விதிமுறைகளை பதிவு செய்தல்
பாடநூல் 7 - பகுதி 1: 1.1. பேசுவோம் - பக்கம் 1
ஆசிரியர் மாணவர்களை பாடநூலிலுள்ள படத்தைப் பார்க்கச் சொல்லவும்.
ஆசிரியர் மாணவர்களிடம் படத்தைக் காட்டி கேள்விகள் கேட்கவும். எடுத்துக்காட்டாக சில கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பேசுவோம்: வழிமுறைகள்
5 எலிகள் & 1 யானை உத்தி பயன்படுத்தவும்.
(கற்பிக்கும் உத்திகள் பகுதியில் இம்முறையைப் பற்றி மேலும் விபரங்கள் பார்க்கவும் - என்ன, எங்கு, எப்போது, ஏன், யார், எப்படி வினாச்சொற்களைப் பயன்படுத்தி படத்தைப் பற்றி பேசவும்.)
எ.கா.
1. நீங்கள் இந்த படத்தில் உள்ள நகரத்தைப் போல எங்கேயும் பார்த்திருக்கிறீர்களா?
2. இந்த கட்டிடங்கள் எந்த வடிவங்களில் இருக்கின்றன?
3. படத்தில் உள்ள பேருந்துகளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா?
4. இதைப் போன்ற படகுகள் San Franciscoவில் உள்ளன. நீங்கள் அதில் சென்றிருக்கிறீர்களா?
5. இது போன்ற பாலங்களின் மேல் நீங்கள் நடந்து சென்றிருக்கிறீர்களா?
மாணவர்களின் அனுபவத்தை அந்தப் படத்திலுள்ள நிகழ்வுகளோடு இணைத்துப் பேசச்சொல்லவும்.
மாணவர்களை குழுக்களாகப் பிரித்துக்கொண்டு படத்தைப் பற்றி உரையாடச் சொல்லவும்.
பாடநூல் 7 - பகுதி 1: 1.2 - வாசிப்போம் - பக்கம் 2-5 - மாமல்லபுரம்
ஆசிரியர் பாடத்தை ஏற்ற இறக்கத்துடன் மாணவர்களுக்கு வாசித்துக் காட்டவும்.
மாணவர்களை ‘னகர, ணகர’ எழுத்துக்களைக் கொண்ட சொற்களை கண்டுபிடிக்கச் சொல்லவும்.
ஆசிரியர் மாணவர்களுக்கு 'ரகர, றகர' எழுத்துக்களை சரியாக உச்சரிக்க பயிற்சி அளிக்கவும்.
மாணவர்கள் சிலரை வகுப்பின் முன் வந்து பாடத்தை வாசிக்கச் சொல்லவும். மற்ற மாணவர்களை அவர்களுடைய வாசிப்பை மதிப்பீடு செய்யச் சொல்லவும்.
இந்தக் கதைக்கு பொருத்தமான தலைப்பைக் கொடுக்கச் சொல்லவும்.
இந்த கதையிலிருந்து மாணவர்கள் தெரிந்து கொண்டது என்ன என்று கேட்கவும்.
வாக்கியம் அமை
Refer to கற்பிக்கும் உத்திகள்/இலக்கணக் குறிப்புகள்
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
சுற்றுலா - tour
பாறை - rock
புடைப்புச் சிற்பம் - embossed sculpture
இரதம் - chariot
கற்பனை - imagination
நினைவுச் சின்னம் - monument
(தெரிந்து கொள்வோம்)
பண்பாட்டுச் சின்னம் - cultural icon
நிறுவனம் - company
குடைவரை - rock-cut
வாக்கியம் அமை
Refer to கற்பிக்கும் உத்திகள்/இலக்கணக் குறிப்புகள்
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
உதாரணம்:
வெற்றி - Victory
அன்பன் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற பள்ளியில் தினமும் நன்றாகப் படித்தான்.
யார் - அன்பன்
எதை - தமிழ் தேர்வில்
ஏன் - வெற்றி பெற
எங்கே - பள்ளியில்
எப்போது - தினமும்
எப்படி - நன்றாக
என்ன (வினை) - படித்தான்
உரையாடல் பயிற்சிக் குறிப்பு
கதை சொல்வோம், முன்னுணர்வுக் கருத்தறிதல், கலந்துரையாடுவோம், படிப்போம் உள்ளிட்ட எந்தப் பாடமாக இருந்தாலும் இந்தக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள "உரையாடல் பயிற்சி - யோசனைகளும் உத்திகளும்" பகுதியைப் பயன்படுத்தி மாணவர்களை ஒருவரோடு ஒருவர் தமிழில் பேசுவதற்கு ஊக்குவிக்கவும். எளிய முறையில் இலக்கணத்தைக் கற்பிக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள பெயர்ச்சொற்களுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து வாக்கியங்களை வகுப்பில் வாய்மொழியாக அமைக்கலாம்.
தேர்வு #1: திட்டப்பணி 1 (Project, Due Week 4)
தலைப்பையும், விதிமுறைகளையும் விளக்கவும்.
திட்டப்பணி 1: தலைப்பு
உனக்கு கால இயந்திரம் கிடைத்தால் நீ எந்த காலத்திற்குச் செல்வாய்? ஏன்?
திட்டப்பணியை அட்டையில் குறைந்தது 15 வாக்கியங்கள், 3 படங்கள், உரிய தலைப்பு மற்றும் குறைந்தது 3 உபதலைப்புகள் (sub-headings) கொண்டு எழுதவும். அதை வகுப்பில் வாய்மொழியாக விளக்க வேண்டும்.
திட்டப்பணியின் மதிப்பெண்கள் கீழே உள்ளவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
சரியான தகவல்கள், உரிய தலைப்பு, உபதலைப்பு - 6 மதிப்பெண்கள்.
பிழையின்மை, நேர்த்தியான கையெழுத்து - 5 மதிப்பெண்கள்.
புகைப்படங்கள், வரைபடங்கள் - 4 மதிப்பெண்கள்.
வகுப்பில் வாய்மொழி விளக்கம் (தடங்கல் இல்லாத பேச்சுச் சரளம்), சரியான ஒழுங்கான உச்சரிப்பு - 15 மதிப்பெண்கள்.
மாணவர்கள் வகுப்பிற்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல் கால தாமதமாக சமர்ப்பிக்கும் திட்டப்பணிக்கு 75% மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
இரண்டு வாரத்திற்கு மேல் கால தாமதமாக சமர்ப்பிக்கும் திட்டப்பணிக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது.
மாணவர் திட்டப்பணியில் இருந்து படித்தால் மதிப்பெண் குறைக்கப்படும். திட்டப்பணியை புரிந்துகொள்ளவும், பார்க்காமல் வழங்கவும் ஊக்குவிக்கவும்.
மாணவர்கள் திட்டப்பணியை தட்டச்சு செய்யக்கூடாது. தட்டச்சு செய்தால் மதிப்பெண் குறைக்கப்படும். திட்டப்பணியை எழுதி இருக்க வேண்டும்.
திட்டப்பணியை ஒரு பெரிய அட்டையில் (chart board) பெயர், வகுப்பு, பிரிவு, ஆசிரியர் பெயர் ஆகிய விபரங்களுடன் சமர்ப்பிக்கவும்.