வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இடவேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனை தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 7 - பகுதி 1: 1.2 - வாசிப்போம் - பக்கம் 2-5 - மாமல்லபுரம்
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளில் உள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்
Online stories for reading log (given in Students handbook)
Online Stories for Reading Log - 1
Online Stories for Reading Log - 2
வாக்கியம் அமை
Refer to கற்பிக்கும் உத்திகள்/இலக்கணக் குறிப்புகள்
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
உதாரணம்:
வெற்றி - Victory
அன்பன் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற பள்ளியில் தினமும் நன்றாகப் படித்தான்.
யார் - அன்பன்
எதை - தமிழ்த் தேர்வில்
ஏன் - வெற்றி பெற
எங்கே - பள்ளியில்
எப்போது - தினமும்
எப்படி - நன்றாக
என்ன (வினை) - படித்தான்
வாக்கியத்தில் அமை:
சுற்றுலா - tour
பாறை - rock
புடைப்புச் சிற்பம் - embossed sculpture
இரதம் - chariot
கற்பனை - imagination
நினைவுச் சின்னம் - monument
பாடநூல் 7 - பகுதி 1: 1.2.1 - பக்கம் 6 - கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை எழுதுக
கவனமாகப் படித்து சரியான விடையைக் கண்டுபிடித்து எழுதவும்.
வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணையை எழுதவும்.
எடுத்துக்காட்டு:
கண்ணன் + ஐ = கண்ணனை
கண்ணன் + ஆல் = கண்ணனால்
கண்ணன் + ஓடு = கண்ணனோடு
கண்ணன் + உடன் = கண்ணனுடன்
கண்ணன் + கு = கண்ணனுக்கு
கண்ணன் + இன் = கண்ணனின்
கண்ணன் + அது = கண்ணனது
கண்ணன் + இல் = கண்ணனில்
கண்ணன் + இலிருந்து = கண்ணனிலிருந்து
கண்ணன் + உடைய = கண்ணனுடைய
கண்ணன் + இடம் = கண்ணனிடம்
கண்ணன் + ஆ = கண்ணா!
கண்ணன் + ஏ = கண்ணனே!
மரம் + ஐ = மரத்தை
மரம் + ஆல் = மரத்தால்
மரம் + ஓடு = மரத்தோடு
மரம் + உடன் = மரத்துடன்
மரம் + கு = மரத்துக்கு
மரம் + இன் = மரத்தின்
மரம் + அது = மரத்தது
மரம் + இல் = மரத்தில்
மரம் + இலிருந்து = மரத்திலிருந்து
மரம் + உடைய = மரத்துடைய
மரம் + இடம் = மரத்திடம்
மரம் + ஏ = மரமே!
கை + ஐ = கையை
கை + ஆல் = கையால்
கை + ஓடு = கையோடு
கை + உடன் = கையுடன்
கை + கு = கைக்கு
கை + இன் = கையின்
கை + அது = கையது
கை + இல் = கையில்
கை + இலிருந்து = கையிலிருந்து
கை + உடைய = கையுடைய
கை + இடம் = கையிடம்
கை + ஏ = கையே!
மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளை ஒரு வாக்கியத்தில் அமைக்கவும்.
எடுத்துக்காட்டு:
கண்ணனுடைய புத்தகம் கையிலிருந்து விழுந்தது.
(சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்தவாரம் பயன்படுத்தக் கூடாது)