வாரம் 22: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனை தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
பாடநூல் 7 - பகுதி 2: 4.13 - பக்கம் 22 திருக்குறள் #4 பொருளுடன் படிக்கவும்.
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 7 - பகுதி 2: 5.5 - பக்கம் 33-34 - கருத்தூன்றிப் படிப்போம் கதையைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
இந்தப் பாடத்திலிருந்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த மூன்று கேள்விகளை எழுதவும். அதற்குரிய விடையை ஒரு சிறிய வாக்கியத்தில் எழுதவும்.
வாக்கியம் அமை
வாக்கியங்களில் குறைந்தது 4-5 சொற்கள் தேவை.
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
பெற்றோர் - parents
சுறுசுறுப்பு - active
சோர்வு - fatigue
விருப்பம் - desire
ஈடுபாடு - involvement
வேற்றுமை உருபு பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணையை எழுதவும்.
மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளை ஒரு வாக்கியத்தில் அமைக்கவும். (சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்தவாரம் பயன்படுத்தக் கூடாது).
பாட நூல் 7 - பகுதி 2: 5.5.1. - பக்கம் 34, 35 - கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை எழுத கவனமாகப் படித்து சரியான விடையைக் கண்டுபிடித்து எழுதவும்.