வாரம் 28: வீட்டுப்பாடம்
உரையாடல் பயிற்சி: (4-5 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம். அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இடவேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனை தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
வாசித்தல் பயிற்சி
பாடநூல் 7 - பகுதி 2: 6.7 - பக்கம் 62-63 - கேட்டல் கருத்தறிதல் பாடத்தைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மாணவர்களுக்கு விருப்பமான ஒரு கதையைப் படித்து தலைப்பை வாசிப்புப் பயிற்சி பதிவேட்டில் எழுதவும்.
மேலும் தமிழ் நாளிதழ் அல்லது செய்தித்தாளிலுள்ள ஏதேனும் ஒரு கட்டுரையைப் படிக்கவும்.
பெற்றோர் வாசித்தல் அட்டவணையில் கையொப்பம் இட வேண்டும்.
மாணவர்கள் படித்த பகுதியிலிருந்து ஏதேனும் ஐந்து வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
வேற்றுமை உருபுப் பயிற்சி
பாடத்தில் உள்ள ஏதேனும் ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபு அட்டவணையை எழுதவும்.
மற்றும் ஏதாவது 2 வேற்றுமை உருபுகளை ஒரு வாக்கியத்தில் அமைக்கவும். (சென்ற வாரம் மாணவர்கள் வாக்கியம் அமைக்கப் பயன்படுத்திய வேற்றுமை உருபுகளை இந்தவாரம் பயன்படுத்தக் கூடாது)
பாடநூல் 7 - பகுதி 2: 6.9. - பக்கம் 65 - கருத்து விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து புரிந்து கொள்ளவும்.
பாடநூல் 7 - பகுதி 2: 6.9.1 - பக்கம் 66
சரியான விடையைக் கண்டுபிடித்து எழுதவும்.